அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கீரிமலை நகுலேஸ்வரம்

2 posters

Go down

கீரிமலை நகுலேஸ்வரம் Empty கீரிமலை நகுலேஸ்வரம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 11:12 pm

கீரிமலை நகுலேஸ்வரம்



கீரிமலை இலங்கையின் வடகரையில் உள்ளது. இது தீர்த்த விசேடம் மிக்க இடம். இங்கு புராதன சிவத்தலம் ஒன்றும் உண்டு. இவ்விடத்தின் புராதன பெயர் திருத்தம்பலை. கோயில் கொண்டிருந்த பெருமானின் புராதன பெயர் திருத்தம்பலே சுவரர். கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் இத்துறையில் நீராடி, அருகிலுள்ள பெருமானை வழிபட்டு வந்ததினாலே கீரிமுகம் மாறப்பெற்றார்.

இக்காரணங் கொண்டே இவ்விடம் கீரிமலை எனப் பெயர் பெற்றது. இதனை வடமொழியில் நகுலகிரி என்பர். இங்கு இடங்கொண்ட இறைவனின் இக்காலப் பெயர் நகுலேசர் - நகுலேசுவரர். இறைவி நகுலாம்பிகை- நகுலேசுவரி. கோவில் நகுலேசுவரம்.

இத்தலம் ஆதிச்சோழ மன்னனாகிய முசுகுந்தன், நளன், அருச்சுனன் முதலி யோரினால் தொழப்பெற்ற ஒன்றாகும். தீர்த்த-தல யாத்திரைகளுக்குரிய புராதனப் புண்ணிய இடங்களுள் கீரிமலையும் ஒன்று.
வடமொழிச் சைவ புராணங்கள் பத்தினுள் கந்தபுராணம் சிறப்பானது. அதில் உள்ள சூதசங்கிதையில் நகுலேசுவரம் பழை மையான யாத்திரைத் தலங்களுள் ஒன்று எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஈழத்தில் சைவம் எவ்வளவு தொன்மைக் காலம் தொடக்கம் நிலவி வருகின்றது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

விசயன் இலங்கை அரசனாக இருந்த போது, இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்ததாக வரலாறு உண்டு.
முன்னாளில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராயிருந்து, பின் கடலால் தாக்குண்டு அழிந்துபோய்விட, எஞ்சியுள்ள அதனடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து, இந்நிலத்தின் கீழேயுள்ள கற்பாறைகளிலே சிப்பிகளும், நத்தைகளும், பதிந்து கல்லாய்க் கிடத்தலாலும், வட கரையிலே கடலினுள் நெடுந்தூரம் கற் பாறைகள் காணப்படுதலாலும், ஆராய்ச்சி யாளர் முடிவைச் சரியானதெனத் துணிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கீரிமலையென்று கூறப்படும் மேட்டு நிலத்தில் சுவறும் மழைநீர், நன்னீரருவியாகிப் பள்ளமாகிய கடற்கரையிற் பலவிடங்களில் சுரந்தோடுகின்றது. இவ்வருவி நீரே கீரிமலைத் தீர்த்தச் சிறப்புக்குரியதாகும். மாருதப்புரவீகவல்லி தீர்த்தமாடித் தனது குன்மநோய் நீங்கப்பெற்ற புண்ணிய தீர்த்தம் இதுவேயாகும்.

பறங்கியர் யாழ்ப்பாண அரசைக் கைப் பற்றிய பொழுது இடித்தழித்த சிவா லயங்களுள் கீரிமலைச்சிவன் கோவிலும் ஒன்று. அழிந்த இக்கோவிலை உருவாக்கு வதற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் முயற்சி எடுத்துள்ளார். அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, இன்று நித்திய நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகாசிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூவகைச் சிறப்பும் இவ்வாலயத்திற்கு உண்டு.
இவ்வாலயத்தின் தொன்மைபற்றிக் கூறும் நூல்கள்; தட்சண கைலாய புராணம், கைலா யமாலை, நகுலாசல புராணம், நகுலமலைக் குறவஞ்சி, நகுலமலைச்சதகம், நகுலகிரிப் புராணம், நகுலேசுவரர் விநோத விசித்திரக் கவிப்பூங்கொத்து என்பனவாகும்.

இவ்வாலயத்திற்குத் திருப்புகழ்ப் பாடல் ஒன்றும் உண்டு. திருப்புகழில் இவ்வாலயம் அருக்கொணாமலை எனப் போற்றப்படுகின்றது. தலவிருட்சம் கல்லால்.
இவ்வாலயத் தீர்த்தக்கரைச் சூழலிலே பல அநுபூதிமான்களது சமாதிகள் உள. இவ்வாலயத்தைச் சூழப் பல திருமடங்களும் யாத்திரிகர் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டுள் ளன. கதிரவேலுச் சிறாப்பர்மடம், சித்தங்கேணி வைத்திலிங்கம் மடம், தொல்புரம் கிருஷ்ணபிள்ளை மடம் போன்றவை குறிப்பிடத்தக்க சிலவாகும்.

நன்றி: அருள்ஒளி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 59
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கீரிமலை நகுலேஸ்வரம் Empty Re: கீரிமலை நகுலேஸ்வரம்

Post by தமிழினி Fri Mar 11, 2016 3:20 am

அருமை,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

ஈழத்து அறுபடை வீடுகள் ,பற்றிய வரலாறுகள் இருந்தால் அவைகளையும் அறிய ஆவல்..

மாவை கந்தன்

நல்லூர்க்கந்தந்

செல்வச்சன்னதி கந்தன்

மண்டூர் கந்தன்

மட்டு சித்திர வேலாயுதர்

இன்னுமொன்று ஞாபகத்துக்கு வரலை

முக்கியமா நான் பல இடங்களில் தேடியும் கிடைக்காத கோவில்

மட்டு சித்திர வேலாயுதர் ..

தமிழினி

Posts : 840
Join date : 25/10/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum