அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மாட்டுக்காரவேலன்

2 posters

Go down

மாட்டுக்காரவேலன் Empty மாட்டுக்காரவேலன்

Post by anuradha Mon Apr 13, 2015 1:17 am

மாட்டுக்காரவேலன்

[You must be registered and logged in to see this image.]

மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம்)
ஜெயலலிதா
லட்சுமி
அசோகன்
வி.கே. ராமசாமி
எஸ். வரலட்சுமி
சோ


கே. வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

ஒரு பக்கம் பாக்குறா டி. எம். சௌந்தரராஜன்
சத்தியம் நீயே டி. எம். சௌந்தரராஜன்
தொட்டுக்கொள்ளவா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பட்டிக்காடா பட்டணமா டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
பூ வைத்த பூவைக்கு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா


இயக்குனர்
பி. நீலகண்டன்

தயாரிப்பாளர்
என். கனக சபை
ஜெயந்த் பிலிம்ஸ்



மாட்டுக்காரவேலன்" சூப்பர்ஹிட் படம். ஜெயந்தி பிலிம்சார் தயாரித்த இந்தப்படத்தில், எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். வசனம்: ஏ.எல்.நாராயணன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்.

மாட்டுக்காரவேலனும், வக்கீல் ரகுவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். சட்டநாதன் குடும்பத்தினர், வக்கீல் ரகுவை வரவேற்கக் காத்திருக்க, அங்கே வேலன் வருகிறான். அவனுக்கு பெரிய விருந்து நடக்கிறது. வேலனை ரகு என்று எண்ணி, அவனை காதலிக்கிறாள், சட்டநாதன் மகள் லலிதா.

உண்மையைச் சொல்லிவிட வேலன் நினைக்கிறான். ஆனால் சூழ்நிலை, அவன் வாயைக் கட்டிப்போடுகிறது. அதே நேரத்தில் ரகு அங்கு வருகிறான். உண்மையை அறிகிறான். தப்பி ஓட நினைத்த வேலனை அங்கேயே தங்க வைத்து, வேலன் _ லலிதா காதல் வளர உதவுகிறான்.

ஆள் மாறாட்டங்களால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களுடன், படம் விறுவிறுப்பாக அமைந்தது. இரட்டை வேடத்தில், எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்தார். குறிப்பாக, மாட்டுக்காரவேலன் வேடத்தில் அவர் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

ஜெயலலிதாவும், மற்ற நட்சத்திரங்களும், பாத்திரத்தை உணர்ந்து, இயல்பாக நடித்தனர். இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் துணை நின்றன. "சத்தியம் நீயே, தர்மத்தாயே", "ஒரு பக்கம் பார்க்குறா", "பட்டிக்காடா பட்டணமா", "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா", "தொட்டுக்கொள்ள வா" ஆகிய கண்ணதாசன் பாடல்கள், திக்கெட்டும் எதிரொலித்தன.

1970 பொங்கல் அன்று வெளிவந்த இந்தப்படம், சென்னை பிராட்வே, மதுரை சிந்தாமணி ஆகிய தியேட்டர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. 14 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. "என் அண்ணன்" வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு. இதற்கு சொர்ணம் வசனம் எழுதினார். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன். இதில் கதாநாயகி ஜெயலலிதா.

[You must be registered and logged in to see this image.]

anuradha

Posts : 25
Join date : 13/04/2015

Back to top Go down

மாட்டுக்காரவேலன் Empty Re: மாட்டுக்காரவேலன்

Post by Admin Tue Apr 14, 2015 8:45 pm

மாட்டுக்கார வேலன் கட்டுரை புகைப்படங்கள் அருமை ..வாழ்த்துக்கள்
திரைப்படம்தான் வேலை செய்யவில்லை ..

நன்றி
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

மாட்டுக்காரவேலன் Empty Re: மாட்டுக்காரவேலன்

Post by anuradha Thu Apr 16, 2015 9:52 pm

Admin wrote:மாட்டுக்கார வேலன் கட்டுரை புகைப்படங்கள் அருமை ..வாழ்த்துக்கள்
திரைப்படம்தான் வேலை செய்யவில்லை ..

நன்றி

இந்த லிங்க் கிளிக் செய்யவும்

லிங்க் இனைக்க முடியவில்லை



மேலே உள்ள பிரேமில் youtube பட்டனை கிளிக் செய்யவும், பிறகு youtube மூலம் படத்தை பார்க்கலாம்

New members are not allowed to post external links or emails for 7 days. Please contact the forum administrator for more information.

anuradha

Posts : 25
Join date : 13/04/2015

Back to top Go down

மாட்டுக்காரவேலன் Empty Re: மாட்டுக்காரவேலன்

Post by Admin Sat Apr 18, 2015 2:37 am

நன்றி ....
Admin
Admin
Admin

Posts : 36
Join date : 17/10/2013

https://thamilinimai.forumieren.com

Back to top Go down

மாட்டுக்காரவேலன் Empty Re: மாட்டுக்காரவேலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum