அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐயப்பன் மணிமாலை

Go down

ஐயப்பன் மணிமாலை Empty ஐயப்பன் மணிமாலை

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 10, 2016 11:54 pm

நவக்ரஹ நாயகரும் நல்லவராய் என்முன்
அவக்கவலை வாரா தருளத்- தவக்கனலாம்
மன்னவன் ஐயப்பன் மணிமாலை நானுரைக்க
முன்னவனே காத்தல் முறை.


ஓதித் தலமெலாம் சுற்றினேன் ஆயினும் உண்மை ஒளி
போதித்த நின்னைப் புகலடைந்தேன் செய்தபுண்ணியத்தால்
சாதித்தவர்க் கருள் ஐயப்பனே நீ தரும் வரத்தால்
ஆதித்த தேவன் எனக்கின்பமெல்லாம் அருள்க நன்றே!

மந்திரம் உன் திரு நாமம் வாழ்விற்கு வழித்துணையாய்
முந்துறல் நீயென்று கண்டுகொண்டேன் நல்முடிசுமந்து
வந்தடைவோர்க்கருள் ஐயப்பனே நின் வரபலத்தால்
சந்திரதேவன் எனக்கின்பமெல்லாம் தந்திலங்குகவே!

கங்காதரனும் கனகாம்பரனும் கலந்து யோக
சிங்காததனமேறும் தேவாதி தேவா சிவகுமரா
வெங்கானகத்துவாழ் ஐயப்பனே நின் தண்ணருளால்
அங்காரகன் எனக்கின்பங்கள் எல்லாம் அருள்க நன்றே!

விதவித மான வியாகுல மெல்லாம் விலக நீயே
சதமென நம்பி என் அப்பா சரணம் சரணம் என்றேன்!
மதகஜ மேல்வரும் ஐயப்பனே நின் வரபலத்தால்
புத பகவான் எனக்கின்பங்களெல்லாம் பொழிக நன்றே!

இருமூர்த்தியும் ஆதிசக்தியும் ஒன்றாய் இணந்து
ஒருமூர்த்தியாய் வந்த உத்தமனே ! ஞானமுற்றவர்முன்
வருமூர்த்தியாம் எங்கள் ஐயப்பனே நீ தரும் வரத்தால்
குருமூர்த்தி இன்பங்கள் எல்லாம் தருக குலமோங்கவே!

விக்கினமின்றி விரதங்கள் காத்து விதி முறைபோல்
அக்கினி ஞான மலைமேல் வருவோருக்கு அருள்புரியும்
முக்கியனே ஜோதி ஐயப்பனே நின் முன் niRpathAl
சுக்கிர மூர்த்தி சுப யோகமெல்லாம் தந்திலங்குகவே!

இனி உனையன்றி எனக்கொன்றுமில்லை என் இச்சையெல்லாம்
கனியவைத்தாய் கருணைக்கடலே! ஒருகட்டும் இன்றித்
தனிமையில் என்னுடன் நீ ஓடியாடிய சத்தியத்தால்
சனிபகவான் இடர் இல்லாத இன்பம் தருக நன்றே!

நிராமயமாகி நிரஞ்சனமாகி வெண்ணீலமான
பராபரனே ஞான பாஸ்கரனே நின் பதம் பணிந்தேன்!
சராசர நாதனே , ஐயப்பனே நின் தண்ணருளால்
இராகு எனக்கு இகபோகமெல்லாம் தந்து இலங்குகவே!

வேதமும், வேதாந்த வித்தையும் ஞான விளக்கமும் நீ
பூத நாதா தேவ தேவனே! பூரணை புஷ்கலையாம்
மாதருடன் வாழும் ஐயப்பனே நின் வரலத்தால்
கேது தருக நிறைந்த சௌபாக்கியமும் கீர்த்தியுமே!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum