அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்

Go down

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கோதாவரி மகா புஷ்கரம் Empty 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்

Post by anuradha Mon Aug 03, 2015 9:41 pm

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்

[You must be registered and logged in to see this image.]

கோதாவரி புஷ்கரம் புனித நீராடும் விழாவை முன்னிட்டு, நேற்று காலையில் ராஜமுந்திரியில் கூடிய பக்தர்கள்.


கோதாவரி புஷ்கரம் புனித நீராடும் விழாவை முன்னிட்டு, நேற்று காலையில் ராஜமுந்திரியில் கூடிய பக்தர்கள்.

[You must be registered and logged in to see this image.]

கோதாவரி புஷ்கரம் நிகழ்ச்சியையொட்டி, ராஜமுந்திரி அருகே கோதாவரி நதியில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. படம்: சிறப்பு ஏற்பாடு


கோதாவரி புஷ்கரம் நிகழ்ச்சியையொட்டி, ராஜமுந்திரி அருகே கோதாவரி நதியில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. படம்: சிறப்பு ஏற்பாடு


ஆந்திராவில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு கோதாவரி மாகா புஷ்கரம் என்ற புனித நீராடும் விழா நேற்று தொடங்கியது. 12 நாட்களுக்கு நடைபெறும்இவ்விழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழா ராஜமுந்திரியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், இந்த விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. இந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் வரும். இது ‘ஆதி புஷ்கரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா வரும் 25 ந்தேதி வரை 12 நாட்களுக்கு நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள்.

கங்கை நதிக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய நதி கோதாவரி. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள திரியம்மகேஷ்வர் பகுதியில் பிரம்மம் கிரி மலையில் தொடங்கும் கோதாவரி, தெலங்கானா மாநிலத்தின் தர்மபுரி, காலேஷ்வரம், பாசரா, பத்ராசலம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆந்திர மாநிலத்தில் நுழைந்து, மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ராஜமுந்திரி, நரசாபுரம், கொவ்வூரு, அந்தர்வேதி வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

கோதாவரி நதியில் ராஜமுந்திரி அருகே பாபி கொண்டலு எனும் இடத்தில்பல்வேறு துணை நதிகள் கலக்கின்றன. அதன் பிறகு அகண்ட கோதாவரி நதியாக வங்கக் கடலில் கலக்கிறது. பகீரதனின் முயற்சியால் பூமிக்கு வந்த கங்கை நதி திரேதா யுகத்தை சேர்ந்ததாகும். ஆனால் சுமார் 1,465 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் கோதாவரி, அதற்கு முந்தைய கிரேதா யுகத்தைச் சேர்ந்த புண்ணிய நதி என கூறப்படுகிறது. வனவாசம் சென்ற ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் கோதாவரி நதிக்கரையில் சில நாட்கள் தங்கியதாகக் கூறப்படுகிறது.

பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் பிரவேசிக்கின்றார். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி உண்டு. நமது நாட்டில் புஷ்கர விழா நடத்தப்படும் நதிகளும் 12 உள்ளன. இவை புஷ்கர நதிகள் என்றும் அழைக்கப்படுகிறது.

அதன்படி குரு மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது கங்கை நதி, ரிஷப ராசிக்கு செல்லும்போது நர்மதா நதி, மிதுன ராசிக்கு பிரவேசிக்கும்போது சரஸ்வதி, கடக ராசியில் பிரவேசிக்கும்போது யமுனா நதி, சிம்ம ராசியில் பிரவேசிக்கும்போது கோதாவரி, கன்னி ராசியில் பிரவேசிக்கும்போது கிருஷ்ணா நதி, துலாம் ராசியில் பிரவேசிக்கும்போது காவிரி, விருச்சிக ராசியில் பிரவேசிக்கும்போது பீமரதி நதி, தனுசு ராசியில் பிரவேசிக்கும்போது புஷ்கர வாகினி, மகர ராசியில் பிரவேசிக்கும்போது துங்கபத்ரா நதி, கும்ப ராசியில் பிரவேசிக்கும்போது சிந்து நதி, மீன ராசியில் பிரவேசிக்கும்போது பிரஹிதா நதி ஆகியவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கர விழா நடத்தப்படுவது ஐதீகம்.

தற்போது சிம்ம ராசியில் குரு பிரவேசித்துள்ளதால் கோதாவரி நதியில் மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த கோதாவரி புஷ்கர விழா, மகா புஷ்கரம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், 144 ஆண்டுகளுக்கு முன்னர் அப் போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இதே கோதாவரி நதியில் புஷ்கர விழா நடத்தப்பட்டது. இதற்கு பிறகு வரும் 2,159 ஆண்டுதான் மகா புஷ்கரம் வரும். இந்த மகா புஷ்கரம் முதல் 12 நாட்கள் முன் புஷ்கரம் என்றும் அடுத்த 12 நாட்கள் பின் புஷ்கரம் என்றும் நடத்தப்படுகிறது. இது கோதாவரி நதியில் மட்டுமே நடத்தப்படும். இந்த புஷ்கர விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 5 முதல் 6 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆந்திர அரசு ரூ.1,650 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. 262 இடங்களில் நீராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு என தனித் தனியாக 1,400 தற்காலிக கழிவறை கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,927 அரசு பஸ்கள் கூடுதலாக ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங் களுக்கு 13 சிறப்பு ரயில்களும், மேலும் 36 ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள் ளன.

ஹைதராபாதில் இருந்து ராஜமுந்திரிக்கு 8, சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு 1 சிறப்புவிமானமும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரம் துப்பரவு தொழிலாளர்கள் மற்றும் 7,000 கூடுதல் போலீஸாரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை ‘கோதாவரி புஷ்கரம்’ விழா நடைபெறுவது உண்டு. தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடக்கும் ‘கும்பமேளா’ போல ஆந்திராவில் நடக்கும் ‘கோதாவரி புஷ்கரம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது.



‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் கரைந்து மறைந்து விடும் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கையாகும். இறுதியாக கடந்த 2003–ம் ஆண்டு ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் ‘புஷ்கரம் விழா’ நடைபெற்றது.அதன்பின் 12 ஆண்டுக்கு பிறகு தற்போது கோதாவரி புஷ்கரம் விழா ராஜமுந்திரியில் நடக்கிறது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதால் விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.

இந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் கொண்டாடப்படுவது உண்டு. இதனை ‘ஆதி புஷ்கரம்’ என்றும் அழைப்பது உண்டு.இந்த காலங்களில் குரு பகவான் கோதாவரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோதவரி ஆறு மராட்டிய மாநிலம் நாசிக்கில் உதயமாகி தெலுங்கானா, ஆந்திரா வழியாக பாய்ந்து வங்ககடலில் கலக்கிறது. எனவே கோதாவரி ஆறு மராட்டியம், தெலுங்கானா, ஆந்திராவில் இந்த புஷ்கரம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த விழாவுக்காக ஆந்திரா அரசு ரூ.1,650 கோடி ஒதுக்கி உள்ளது. த்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது. மராட்டிய அரசு ரூ.10 கோடி ஒதுக்கி உள்ளது.

குருபகவான் நாளை (14–ந்தேதி) காலை 6.25 மணிக்கு கோதாவரி ஆற்றில் பயணிக்கிறார். அந்த நேரத்தில் புனித நீராடுவது சிறப்பானது என கருதப்படுகிறது.நாளை தொடங்கும் விழா வருகிற 25–ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள்.

மொத்தம் 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராட கோதாவரி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் வசதிக்காக ஆந்திரா அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது.

கோதாவரி வரும் பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். சிலர் கோதாவரி நதிக்கு ஆராதனை செய்வார்கள். இந்த பூஜைகள் நடத்த ஆந்திர அறநிலையத்துறை சார்பில் 4295 பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜமுந்திரியில் நாளை முகூர்த்த நேரத்தில் காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி கோதாவரிக்கு ஆரத்தி எடுத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இதேபோல் கோவூர் கோஸ்பாதகேந்திர நதியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்கரண நீராடுகிறார்.

விழாவில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் கலந்து கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் புனித நீராடிய பின் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் நீராட உள்ளார். இதற்காக அவர் இன்று மாலையே ராஜமுந்திரி வருகிறார்.

ராஜமுந்திரி கலைக் கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்கு கோதாவரி புஷ்கர வரவேற்பு விழா நடக்கிறது. இதில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார்.விழாவில் விளையாட்டு வீரர்கள் கொண்டுவரும் அகண்ட ஜோதியை அவர் பெற்றுக் கொள்கிறார். பின்னர் 1000 கலைஞர்கள் பங்கேற்க குச்சிப்புடி நடனம் நடக்கிறது. நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பக்தர்கள் வசதிக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ராஜமுந்திரிக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.ஆந்திரா வரும் ரெயில்கள் அனைத்தும் ராஜமுந்திரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு ஐதராபாத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு ஹெலிகாப்டர் சேவையும் ஆந்திர அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

இதேபோல தெலுங்கானா அரசும் ராஜமுந்திரிக்கு சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.ராஜமுந்திரியில் தற்காலிக கழிவறைகள், குளியல் அறைகள் போன்றவைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் புனித நீராடு பவர்கள் சோப்பு, ஷாம்பு உபயோகிக்க கூடாது. துணி துவைக்கவும் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் பக்தர்கள் புனித நீராடும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

பசாரா கோவில் (ஆதிலா பாத்), ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் (கரீம்நகர்), கூடம்குட்டி கோவில் (ஆதிலாபாத்), ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி கோவில் (சலேஸ்வரம் கரீம்நகர்), பத்ராச்சலம் கோவில் (கம்மம்), பட்டி சீமா (ராஜமுந்திரி), திரிம்ப கேஸ்வரர் (மராட்டியம்), நாசிக் (மராட்டியம்), ஏனாம் (புதுச்சேரி மாநிலம்), ஸ்ரீஹசர் சாகிப் சிக் குருத்வாரா (நான்டெட்), ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோவில் (கிழக்கு கோதாவரி).


கோதாவரி இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது கங்கை, சிந்து ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 கி.மீ. ஆகும்.

கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. திரிம்பாக் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. கிழக்கு நோக்கி தக்காண மேட்டுநிலத்தில் பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி இராஜமுந்திரிக்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர். இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான கிருஷ்ணா, காவிரி போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை.

புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் இவ்வாற்றின் கழிமுகத்தில் உள்ளது.


[You must be registered and logged in to see this image.]

anuradha

Posts : 25
Join date : 13/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum