அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அற்புதம் அருளும் ஆடி மாதம்

Go down

அற்புதம் அருளும் ஆடி மாதம் Empty அற்புதம் அருளும் ஆடி மாதம்

Post by anuradha Mon Aug 03, 2015 9:38 pm

அற்புதம் அருளும் ஆடி மாதம்

[You must be registered and logged in to see this image.]

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மையிலங்கு கண்ணிக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகத் ஜனனிக்கு, ஜகன் மாதாவிற்கு, அவளுக்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி.

சூரிய பகவான் தை மாதத்திலும் ஆடி மாதத்திலும் தன் ரதத்தை திசை மாற்றிச் செலுத்துகிறான். சூரியன் தை மாதத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும்போது தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த ஆடி மாதப் புண்ணிய காலத்தில் புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பர். எனினும் ஆடி மாத முதல் மூன்று நாட்கள் நீராடக்கூடாது என்றும் கூறியுள்ள னர். அந்த முதல் மூன்று நாட்கள் "நதி ரசஜ்வாலா' எனப் படும். இந்த மூன்று நாட்கள் நதிகளுக்குரிய தீட்டு நாட்களா கும். ஜீவநதியான கங்கையில் எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருப்பதால் ஆடி மாதம் புதிதாக நீர் வரும் வாய்ப்பு இல்லை. மற்ற ஆறுகளில் பழங்காலத்தில் ஆடி மாதத்தில் புது நீர் வரும். அந்த நீர் பெரும்பாலும் கலங்கலாகவும் அழுக்காகவும் இருக்கும். எனவே ஆடி முதல் தேதியை ஒட்டி வரும் புதிய நீர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் நதிகளில் குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால், கடல், கோவில்களில் உள்ள புனிதக் குளங்களில் நீராடலாம். ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும். மேலும், ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி ஒரு கல்பத்தில் அவதாரம் செய்தாள் என்று புராணம் கூறுகிறது. ஆடிப்பூர நட்சத்திரத்தில்தான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் துளசி வனத்தில் கோதை ஆண்டாள் அவதரித்தாள். ஒவ்வொரு ஆடி மாத வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கு மிகச் சிறப்பான நாள். இந்த நாளில் அம்மனை வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது. அதனால் அன்று அம்மன் கோவில்களில் வளைக்காப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்நாளில் அம்பாளுக்கு கண்ணாடி வளையல்களை சமர்ப்பித்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் நீடிக்கும்; கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதத்தின் சிகரமாகத் திகழ்வது ஆடித்தபசு விழா. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆடித்தபசு விழா பத்து நாட்கள் நடை பெறும். தவமிருந்த அன்னைக்கு இறைவன் சங்கர- நாராயண ராகக் காட்சி தந்த நாள் ஆடி பௌர்ணமி நாளாகும். காவேரிக் கரையோர மக்கள் ஆடி 18 அன்று காவேரி அன்னையை வழிபாடு செய்வார்கள். காவேரி அம்மனுக்கு இந்தச் சமயத்தில் மசக்கை ஏற்பட்டிருப்பதாக ஐதீகம். அதனால் சித்திரான்னங்களான புளியஞ் சாதம், தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயசம் மற்றும் கலவைச் சாதம், பழம், வெற்றிலைப் பாக்கு, காதோலை, கருகமணி என்று காவேரி நதிக்குப் படைத்து, சிறிதளவு ஓடும் காவேரி நதிக்கு சமர்ப்பிப்பார்கள். காவேரி நதியை வழிபடும்போது, மஞ்சள் தடவிய நூலினை வைத்துப் படைத்து, பிறகு பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் அணிந்துகொள்வது வழக்கம். ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்வார். காலையில் சுமார் பத்து மணிக்கு ஸ்ரீரங்கம் தென்புறத்தில் உள்ள அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார். பிறகு மாலையில் கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட் களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வருவார்கள். அந்த மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார். இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும் என்பர். முருகப் பெருமானுக்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடி கிருத்திகை அன்று முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்துக் கோவில்களிலும் விழாக் கோலம் காணும். இதேபோல் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகிறது. இந்நாளில் நமது முன்னோர் களுக்கு புனித நீர் நிலையில் பிதுர்பூஜை செய்வதால் முன்னோர்களின் ஆசிகிட்டும். ஆடி மாதப் பௌர்ணமி நாளில் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கூறுவர். அன்று வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதை களை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும். ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். மேலும் ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால் புண்ணியம் கூடுவதுடன், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்பர். கருடபஞ்சமி, நாகபஞ்சமி ஆகியவையும் ஆடி மாதத்திற்கு சிறப்பினைக் கூட்டுகின்றன. ஆடி மாத சிறப்பு நாட்களில் விரதம் கடைப்பிடித்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால், வளமான வாழ்வு என்றும் நிரந்தரம்!


இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.


ஆடிப் பண்டிகை ஜூலை 17

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விசேஷம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் நாளைப் பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். இந்த மாதத்தில் ஆடித் தபசு, பதினெட்டாம் பெருக்கு, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, திருவாடிப்பூரம் உட்பட ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியும் அம்மனுக்கு உற்சவம்தான்.

ஆடித் தபசு

முன்னொரு காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாயிருந்த காட்சியைத் தனக்குக் காட்டுமாறு சிவனிடம் பார்வதி தேவி கேட்டார். அவ்வுருவைக் காண வேண்டுமானால் பார்வதி தேவி தவம் செய்ய வேண்டும் என்றார் சிவபெருமான்.

புன்னை வனத்தில் கடும் தவம் செய்த அன்னைக்கு ஆடி மாதம் பெளர்ணமியன்று இடப்பாகம் சிவனாகவும், வலது பாகம் நாராயணனாகவும் காட்சி அளித்தார் சிவபெருமான். பார்வதி தேவி மீண்டும் சிவனாக உருக்காட்டுமாறு வேண்ட அவ்வாறே சிவரூபம் மட்டும் காட்டி நின்றார் சிவன்.

இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நிகழ்ந்ததால், ஆடித் தபசு என்ற விழாவன்று சிவன் மாலையில் சங்கர நாராயணனாகக் காட்சி அளிக்கும் வைபவமும், பின்னர் சிவனாகக் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

சிவனும், விஷ்ணுவும் சங்கர நாராயணனாகத் தோன்றியதுபோலவே இடப்புறம் பார்வதியும், வலப்புறம் மகாலட்சுமியுமாக இத்திருக்கோவிலில் காட்சி அளிக்கிறார்கள்.

பதினெட்டாம் பெருக்கு

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் காவிரியைக் கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. மழைக் காலமானதால் அன்றைய தினம் இரு கரை தொட்டு ஒடுவாள் காவிரி. பொங்கிப் பிரவாகிக்கும் அன்னையை விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடுவர். பெண்கள் தாலி மாற்றிக்கொள்ளும் வைபவமும் நடக்கும். பூக்களை ஆற்று நீரில் போட்டு, காவிரியைத் தன் தாயாக நினைத்து வணங்குவார்கள். கலந்த சாதம் கொண்டுவந்து குடும்பமாய் அமர்ந்து சாப்பிடுவர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் கடற்கரையில் அமர்ந்து இவ்விழா வினைக் கொண்டாடுவார்கள். குடிநீரைப் பூஜித்தல், அனைவர் மனதிலும் நீரைக் காக்க வேண்டும் என்ற ஆக்கபூர்வமான எண்ணத்தை உண்டாக்கும். அதனால் சமையல் அறையில் உள்ள குழாய்க்குப் பூச்சூட்டி மகிழலாம். நீர் நிரம்பிய அண்டா, குண்டா, வாளி போன்றவற்றிலும் மலர் தூவி நீரை ஆராதிக்கலாம்.

ஆடிக் கிருத்திகை

கார்த்திகேயனை, கிருத்திகைப் பெண்கள் கண்டெடுத்து வளர்த்த நாள் என்பதாலும், முருகவேள் அன்னை பராசக்தியின் சக்தி வேலைத் தாங்கிய நாள் என்பதாலும் ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் என்பார்கள். அன்றைய தினம் முருக பக்தர்கள் பால் காவடி தூக்கி வந்து பிரார்த்தனை செலுத்துவார்கள். ‘கந்தனுக்கு அரோகரா’ என பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்திடுவார்கள்.

ஆடி அமாவாசை

நீத்தார் கடன் அளிக்க உகந்த நாள் ஆடி அமாவாசை. அன்றைய தினம் சக்திக்குச் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதும் நன்மை பயக்கும்.

திருவாடிப்பூரம்

ஆண்டாள் ஆடிப்பூரத்தன்று துளசிச் செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்டதால் இந்த நாள் விசேஷம். அதனால் ஆண்டாளுக்குப் பல பூஜைகள் செய்து ஆராதிப்பர்.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் வெள்ளியன்று பருப்புப் பாயசமும், உளுந்து வடையும் செய்து நிவேதிக்க வேண்டும். மூன்றாம் வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல் செய்ய வேண்டும். நான்காம் வெள்ளியன்று ரவா கேசரி செய்து படைக்கலாம்.

இந்த ஆண்டு, ஆடி மாதம் முதல் நாளே வெள்ளிக்கிழமை பிறப்பதால், மாதம் முழுவதுமாக ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. பொதுவாக ஐந்தாம் வெள்ளிக்கிழமை பால் பாயசம் செய்ய வேண்டும். ஆனால் அதே நாளன்று ஆடி அமாவாசையாக இருப்பதால் வெல்லமும் பருப்பும் கலந்த பாயசம்தான் செய்ய வேண்டும்.

இவற்றை அம்பாளுக்குப் படைத்த பின் தாமும் உண்டு, அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். குறிப்பாக இல்லத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் உடல்நலனைப் பேண வேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதை நினைவுகூரவே பண்டிகைகளும் பாயாசங்களும் என்றால் மிகையில்லை.

தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. கோயில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். இந்த ஆடி மாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்தி மணம் கமழும். குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், தங்கள் ஊரின் அருகில் உள்ள அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். அந்த வகையில் அருகில் உள்ள தலங்களை சென்று தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.குபேரன் வழிபட்ட ‘வாஸ்து’ காளிகாம்பாள்சென்னையின் முக்கிய பகுதியான பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. இத்தலத்துக்கு பல சிறப்புகள் உண்டு. வியாசர், அகத்தியர், குபேரன் போன்றோர் வழிபட்ட ஸ்தலம். இத்தலம் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஈசான்ய திசையிலும், மயிலை கற்பகாம்பாளுக்கு வடக்கிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு தெற்கிலும், திருவேற்காடு கருமாரி அம்மனுக்கு கிழக்கிலும் வாஸ்துப்படி அமையப் பெற்ற தலமாகும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்கு உள்ளது.நல்வாழ்வு தரும் மயிலை கற்பகாம்பாள்சென்னை மாநகரின் பிரசித்தி பெற்ற ஸ்தலம் மயிலாப்பூர். இங்கு கபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் அருள் புரிகிறார்கள். தல வரலாறுபடி சிவனை மயில் வடிவில் வழிபட்டதால் மயிலாப்பூர் என பெயர் ஏற்பட்டது. இது பாடல் பெற்ற ஸ்தலமாகும். சர்வரோக நிவாரண ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள இறைவன் - அம்பாளை மனமுருக பிரார்த்தித்தால் சகல நோய்களும் நீங்கி, ஆரோக்கியமான, வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.குடிசையில் அருளும் முண்டகக் கண்ணிசென்னை மயிலாப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் இத்தலம் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி. இங்கு அம்மன் சன்னதியில் கருவறை விமானம் கிடையாது. அம்மன் விருப்பம் அது என்பதால், காலம் காலமாக கீற்றுக் கொட்டைகைக்குள் இருந்தபடி அருள் பாலிக்கிறாள்.ஞானம் தரும் முப்பெரும் நாயகிகள்கொடியிடைநாயகி: சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம். திருவுடைநாயகி: சென்னை - பொன்னேரி மார்க்கத்தில் மீஞ்சூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம்.வடிவுடைநாயகி: சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற ஸ்தலம்.இந்த மூன்று அம்மன்களையும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமிகளில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. ஒரே நாளில் மூன்று அம்மனையும் தரிசித்தால் சகல பாக்யங்களும் விருத்தியாகும். குறிப்பாக கல்வி, கலைகள், ஞானம் சிறக்கும். மாணவர்கள் பவுர்ணமியன்று தரிசிக்க கல்வியில் மேன்மைஅடைவார்கள்.திருமண தோஷம் நீக்கும் கருமாரிசென்னை - பூந்தமல்லி அருகே மதுரவாயல் அருகே திருவேற்காடு உள்ளது. வேலமரங்கள் சூழப்பட்டிருந்ததால் வேற்காடு என பெயர் பெற்றது. அன்னை பராசக்தியே கருமாரி அம்மனாக அருள் புரிகிறாள். இத்தலத்தில் மிகப்பெரிய புற்றுக் கோயில் உள்ளது. திருமணத் தடை, திருமண தோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவைகளுக்கு இத்தலத்தில் வேண்டுதல் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பது ஐதீகம்.பதவி உயர்வு அளிக்கும் மாங்காடு காமாட்சிசென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ளது மாங்காடு. இத்தலத்து அம்பாள் உக்கிரமாக தவமிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டவள். ஆதிசங்கரரால் போற்றி துதிக்கப்பட்ட ஸ்தலம். உத்யோகத்தில் பிரச்னை இருப்பவர்கள், பதவி உயர்வு தடைபடுபவர்கள். இங்கு வேண்டிக்கொண்டால் உத்யோகம், தொழிலில் இருக்கும் தடை, தடங்கல்களை அகற்றி நல்வாழ்வு அருள்வாள்.பாவங்கள் போக்கும் பெரியபாளையம் பவானிதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையத்தில் பவானி அம்மன் அருள்புரிகிறாள். ஆடி திருவிழா இங்கு 10 வாரங்கள் வெகு விமரிசையாக நடக்கும். மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் பலர் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்துவார்கள். உடம்பில் வேப்பிலை கட்டி கோயிலை பிரதட்சணம் செய்தால் சகல பாவங்களையும் போக்கி பெரியபாளையத்தாள் வளமான வாழ்வு தருவாள் என்பது நம்பிக்கை.சுக்கிர தோஷம் நீக்கும் ஆனந்தவல்லிசென்னையின் மைய பகுதியில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இந்த அம்பாள் அருள் புரிகிறாள். அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. இது சிவ ஸ்தலம் என்றாலும், இங்கு சுக்கிரவார அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்கிரபகவான் தோஷம் நீக்கும் ஸ்தலம் என்பதால் சுக்கிரவார அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இது பரிகார ஸ்தலமாகும். களத்திர தோஷம், சுக்கிரதோஷம் திருமண தடை போன்றவற்றுக்கு இங்கு வேண்டிக்கொண்டால் தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். கண்நோய், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இங்கு வந்து வழிபட ரோக நிவாரணம் ஏற்படும். இங்கு பல்லக்கு தூக்கி நேர்த்திக் கடன் செலுத்துவது சிறந்த பரிகாரமாகும். சுக்கிரவார அம்மனின் பல்லக்கை பெண்களே தூக்கி வருவது இத்தலத்தின் சிறப்பாகும்.குழந்தை வரம் தரும் புட்லூர் அம்மன்சென்னை - திருவள்ளூர் செல்லும் வழியில் காக்களூர் அருகே புட்லூர் என்ற இத்தலம் உள்ளது. இங்கு அம்மன் வித்தியாசமாக கர்ப்பிணிப் பெண் வடிவில் கால் நீட்டி படுத்து ஆசி வழங்குகிறாள். இத்தலத்தின் உள்ளே செல்வதே மெய்சிலிர்க்கும் அனுபவம். மஞ்சள், குங்கும வாசனையுடன் தெய்வீக அருள் பொதிந்து இருக்கும் தலம். இது குழந்தை பாக்ய ஸ்தலமாகும். குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் மனதார பிரார்த்தித்தால் குழந்தை பாக்யம் உண்டாகும். கர்ப்பிணிகள் வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும்.வழக்கு, விவகாரங்கள் தீர்க்கும் மதுரகாளிசென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் இந்த அம்பாள் அருள்புரிகிறாள். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலய வழிபாட்டு முறையே இங்கும் பின்பற்றப்படுகிறது. இங்கு திங்கள், வெள்ளி கிழமைகளில் மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும். மற்ற தினங்களில் உற்சவரை மட்டுமே தரிசிக்கலாம். கோர்ட், வழக்குகள், மனநல பாதிப்பு போன்றவற்றுக்கு அம்மன் நிவாரணம் தருவாள் என்பது நம்பிக்கை. மதுரையை எரித்த கண்ணகிதான் சினம் தணிந்து மதுரகாளியாக வீற்றிருக்கிறாள் என்றும் சிலர் கூறுகின்றனர்.கண்டுபிடித்து கொடுக்கும் அரைக்காசு அம்மன்சென்னை - வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் அம்பாள் பார்வதிதேவி அம்சமாக நான்கு கரங்களுடன் அமர்ந்து இருக்கிறாள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை நாட்களில் இங்கு விசேஷம். இத்தலத்து அம்மனை வேண்டிக் கொண்டால் தொலைந்த பொருள் மீண்டும் கிடைப்பதாக நம்பிக்கை, மேலும் ஞானத்தையும், ஞாபக சக்தியையும் தருபவளாக இருக்கிறாள். இத்தலத்துக்கு அருகில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் கோயில் அமைந்துள்ளது.திருஷ்டிகள் நீக்கும் காஞ்சி காமாட்சிமிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற ஸ்தலம் காஞ்சிபுரம். ஊரின் மையப் பகுதியில் காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இது சக்தி பீடங்களில் ஒன்று. இதற்கு காமகோடி பீடம் என்று பெயர். இத்தலத்து அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் கூறுகிறது. இங்குள்ள ஸ்ரீசக்கிரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். சகல திருஷ்டி தோஷங்களை நீக்கும் சக்தி உடையது. ஆனந்தலஹரி என்ற ஸ்தோத்திரத்தை இங்குதான் ஆதிசங்கரர் பாடினார். இது நவக்கிரக தோஷம் நீக்கும் ஸ்தலமாகும். இங்கு பஞ்ச காமாட்சிகள் அருள்புரிகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மன் தரிசனம் செய்து அவள் அருள் பெறுவோமாக! -

anuradha

Posts : 25
Join date : 13/04/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum