அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்

Go down

கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்  Empty கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 13, 2017 8:41 pm

----------------------------------------
சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்
டாக்டர் அறிவுரை
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது

^

நேர அட்டவனனைப்படி
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள்

^

உயிரை கொன்று
அலங்கரிக்கப்படுகிறது
பட்டுப்புடவை

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம்
கட்டணமின்றி தூங்கலாம்
நடைபாதை

^

பகலிரவு ஆட்டம்
இரவு சூதாட்டம்
பகல் கிரிகட் ஆட்டம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்  Empty Re: கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 13, 2017 9:05 pm

-----------------------
கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
-----------------------
மனதில் இருள்
ஆடையில் வெண்மை
விதவை
@@@
காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி
@@@
உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் மாறவில்லை
கிழிந்த ஆடை
@@@
-----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
திருடர்கள் ஜாக்கிரதை
^^^
பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்
^^^
தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி
^^^
திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum