அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அகராதி நீ என் அகராதி

Go down

அகராதி நீ என் அகராதி  Empty அகராதி நீ என் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 25, 2016 10:02 am

அகராதி நீ என் அகராதி .....
அகரம் முதல் அந்தம் வரை.....
அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ.....
அழகு தமிழ் வார்த்தைகளை......
அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!!

அகோராத்திரமும் உன்னை நினைத்து.....
அல்லோலகல்லோலப்படுகிறேன்......
அணைக்கவும் முடியவில்லை.......
அகலவும் முடியவில்லை ........
அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......?
அழகு தேவதையே அகத்தரசியே

&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
மேலும் தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

அகராதி நீ என் அகராதி  Empty Re: அகராதி நீ என் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 27, 2016 9:29 pm

அவன்
----------
அழகு தமிழ் பேசும் அழகி நீ
அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ
அகங்காரம் கொண்ட அழகி நீ
அகட விகடமாய் பேசும் அழகி நீ
அகத்தில் முழு நிலா அழகி நீ

அகம் முழுதும் நிறைந்தவளே.....
அழகுக்கு மகுடமாய் இருப்பவளே.....
அகோரமாக்குதடி உன் நினைவுகள்.....
அக்கினியில் எரியுதடி என் இதயம்.....
அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!

அவள்
---------
அச்சப்படாதே அச்சுதனே..........
அகம்பை யான் உனக்கேதான்.......
அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை
அடர்த்தி கொண்ட நம் காதல்........
அகிலம் போற்றும் காதலடா..........!!!

அடைமழைபோல் இன்பம் தருவேன்.......
அந்தகாரத்தில் இன்பம் தருவேன்......
அபலை என்னை ஏமாற்றிவிடாதே......
அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே....
அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!!

&^&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum