அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Go down

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  Empty நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 10:54 am

வறுமை
எல்லோருக்கும் பொதுமை .....
உலகில் சதித்தவனும் ....
சாதிக்க போகிறவனுக்கும் ....
மூலதனம் - வறுமை ....!!!

இவனுக்கோ ....
பிறப்பிடமே - வறுமை - என்றால் ....
கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் ....
உங்களுக்கு கடினமாய் தான் ....
இருக்கப்போகிறது .....!!!

யார் இவன் ...?
அடிப்படை வசதிகள் குறைந்த ....
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ...
தன்மானத்துடன் காத்திருந்து ....
கிடைத்தால் சாப்பிட்டு ....
கிடைக்கா விட்டால் ஈரதுணியை ....
வயிற்றில் கட்டி வாழ்ந்த ....
கௌரவம் மிக்க வறுமை குடும்ப ....
நாயகன் - " ஆதவன் ".......!!!

இவனது
வாழ்கை தற்காலத்துக்கு ....
எந்தளவுக்கு பொருந்தும் ...
ஏற்கும் என்று தெரியாது ....
ஆனால் இவனின் வாழ்கை ....
இவனுக்கு முழு உண்மை .....!!!

^^^

வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  Empty Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 10:54 am

தந்தை தாய் உட்பட ....
குடும்ப உறுப்பினர் பத்து ....
ஆதவன் நடுப்பிள்ளை ஐந்து....
பிறந்த நாளில் இருந்து ....
ஒருவாரம் வரை கடும் மழை ....
அருகில் இருந்த ஆறு உடைக்கும் ...
ஆபத்தான நிலையில் ....
ஆற்றுக்கு அருகே ஆதவன் ....
குடிசை வீடு .......!!!

ஆதவன் தந்தை சாமி ....
சாமி ஆறு உடைக்கபோகுது ....
சீக்கிரம் வீட்டுக்குள் இருந்து ....
வெளியே வா என்ற அயலவர் .....
அவசர குரல் கேட்க - ஆதவனை ....
ஒரு துணியால் சுற்றிய படி ....
வெளியே சாமி குடும்பம் ....
வந்த போது சில நிமிடத்தில்....
அந்த மண் குடிசை இடித்து ....
விழுந்தது ......!!!

^^^

தொடரும் இவன் போராட்டம்

^^^

வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  Empty Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 10:55 am

ஆதவனின் தந்தை சாமி ...
தினக்கூலி அன்று உழைத்தால் ...
அன்று உணவு என்ற வாழ்கை ...
இதுதான் தொழில் என்று இல்லை ....
எந்த வேலை கிடைக்குமோ ....
அந்த தொழிலை செய்வார் ....!!!

ஆதவனுக்கு அடுத்த ஒரு ...
தங்கை அவளுக்கும் இவனுக்கும் ....
இரண்டு வயது வேறுபாடுதான் ....
தங்கைக்கு திடீரென பெரும் ....
நோய் - கடவுளின் சோதனை ...
ஆதவனும் நோய்வாய் பட்டான் ....!!!

இருவரையும் ஒரே வைத்தியசாலை ..
ஆதவன் தந்தை வைத்தியசாலை ...
மேல்மாடியில் ஆதவனையும் ....
கீழ் மாடியில் ஆதவனின் தாய் ...
தங்கையையும் வைத்திருகிறார்கள் ...!!!

உழைப்புகள் இரண்டும் முடங்கின ...
வீட்டில் அடுப்படியில் பூனை ...
நிம்மதியாய் தூங்கியது ....!!!

^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை
^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  Empty Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 10:55 am

ஆதவனுக்கு
இரண்டு அண்ணன்
இரண்டு அக்கா ஒரு ...
தங்கை .......!!!

எல்லோருக்கும் சின்ன ...
வயது படிக்கும் வயது .....
கூலிக்கு போக முடியாத .....
சின்ன வயது என்றாலும் ....
அருகில் உள்ள காட்டுக்கு ....
சென்று சுண்டம் கத்தரி ....
பறித்து சந்தையில் விற்று ....
அதில் வரும் காசில் அரிசி ....
அன்றைய வயிற்றை ...
நிரப்பும் ....!!!

ஆதவனின்
நோய் நிலை நாளுக்கு நாள்
மோசமடைகிறது - தந்தை சாமி ...
ஆதவனுடன் போராடும் சக்தியை....
இழந்து போராடுகிறார் .....!!!

அதிர்ச்சி தகவல் ஒன்றை ....
சாமியிடம் சொன்னார் டாக்டர் .....!!!

^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 04
^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  Empty Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 10:55 am

ஆதவனின் உடல் நிலை ...
நாளுக்கு நாள் மோசமடைந்தே....
வருகிறது அந்த சிறுவயதில் ....
இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ....
மருந்து ஊசி போடப்பட்டு ...
உடலே வெந்து போய்விட்டது .....!!!

மறு புறத்தில் ஆதவனின் ....
தங்கை உயிருடன் போராடுகிறாள் ....
இருவருக்கும் மரண போராட்டம் ....
யாரோ ஒருவர் இறந்து ஒருவர் ...
பிழைக்கவேண்டும் வேண்டும் ...
ஒரு சோதிடரும் சொன்னாராம்.....
சோதிடம் சரியோ தவறோ தெரியாது
ஆதவனின் தங்கை இறந்து விட்டாள்....
ஆதவன் உயிருக்கு போராடுகிறான் ...!!!

வைத்திய சாலையின் பிரதான ....
வைத்தியர் ஆதவனின் அப்பாவிடம் ...
சாமி என்னால் இனிஒன்றும் செய்ய ....
முடியாது உன் மகனை முடிந்தால் ...
நகரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு ...
மன ஆறுதலுக்கு கொண்டு போ ....
என்று சொன்ன சமயம் .....
சாமியார் அழுத்த படி ஆதவனை ...
தூக்கி கொண்டு மருந்து எடுக்கும் ...
இடத்துக்கு கடைசி பயணத்தை ....
மேற்கொண்டார் .....!!!

அங்கே .........????????????????

^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 05
^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  Empty Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sat Mar 12, 2016 11:53 am

கண்ணீருடன் ஆதவனின் தந்தை ....
மருந்து எடுக்கும் இடத்துக்கு சென்றார் ....
அங்கே மருந்து கொடுக்கும் அந்தோனி ...
சாமியாரிடம் கேட்டார் .....?

ஏன் சாமியார் அழுகுறீர்கள்...?
வருடமாய் வைத்திய சாலையில் ....
ஒருநாளும் அழவே இல்லை ....
இன்று எதற்காக அழுகிறீர்கள் ...?
சாமியார்- அந்தோனிஅய்யா ...
மகன் பிழைகமாட்டான் என்று ..
பெரிய டாக்கர் சொல்லிடார் -நான்
வீட்டுக்கு போகிறேன்.......!!!

அழதே சாமி
அவன் நிச்சயம் சாக மாட்டான்.....
இவன் ஒருகாலத்தில் எல்லோருக்கும் ...
தெரிந்த ஆளாக இருப்பான்......
தீக்க தரிசனமாய் கூறியது.....
ஆதவனின் 18 வயதில் 100 சதவீதம் ...
பொருந்தியது .- நாட்டு ஜானாதிபதியிடம்
உயர் பெறு பேறுக்காக தேசிய விருது ...
பெற்றான் .....!!!

^^^
தொடரும் இவன் போராட்டம்
^^^
வாருங்கள் இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை 06
^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்

Posts : 1021
Join date : 10/03/2016
Age : 58
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.iniyavankavithai.blogspot.com  www.iniyavan2013.blogs

Back to top Go down

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  Empty Re: நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum